குர்ஆன் 17:24 — இஸ்ரவேலின் சந்ததியினர்
மேலும் பணிவு மற்றும் கனிவின் இறக்கைகளை அவர்களுக்காகத் தாழ்த்திக் கொள்ளும், மேலும், “என் இரட்சகரே, அவர்கள் மீது கருணை கொள்வீராக, ஏனெனில் அவர்கள் குழந்தைப் பருவத்திலிருந்து என்னை வளர்த்து வந்தனர்” என்று கூறுவீராக.
[17:23] அவரை அன்றி நீர் வழிபடக்கூடாதெனவும், மேலும் உமது பெற்றோர்கள் கண்ணியப்படுத்தப் பட வேண்டுமெனவும் உமது இரட்சகர் விதித்துள்ளார். அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ உயிரோடிருக்கும் வரை, அவர்களை நோக்கி நீர், “சே” (வெறுப்பைக் காட்டும் மிகச் சிறிய செய்கை) என்று ஒரு போதும் கூறிவிட வேண்டாம், அன்றி அவர்களிடத்தில் நீர் கூச்சலிடவும் வேண்டாம்; நீர் அவர்களை இணக்கத்துடன் நடத்திட வேண்டும்.
[17:25] உங்கள் இரட்சகர் உங்களுடைய ஆழ்மனதின் எண்ணங்களை முற்றிலும் அறிந்திருக்கின்றார். நீங்கள் நன்னெறிகளைக் கடைப்பிடித்து வந்தால், வருந்தித்திருந்துகின்றவர்களை அவர் மன்னிப் பவராக இருக்கின்றார்.