குர்ஆன் 17:30 — இஸ்ரவேலின் சந்ததியினர்
ஏனெனில் தான் தேர்ந்தெடுக்கின்ற எவரொரு வருக்கும் உமது இரட்சகர் வாழ்வாதாரங்களை அதிகரிக்கின்றார், மேலும் அதனைக் குறைக் கவும் செய்கின்றார். தன் படைப்புகளை அவர் முற்றிலும் நன்கறிந்தவர், பார்ப்பவர்.
[17:29] நீங்கள் நிந்திக்கப்பட்டவராகவும் மேலும் வருத்தப்பட்டவராகவும் முடிந்துவிடாதிருக்கும் பொருட்டு, கஞ்சத்தனமாக உங்கள் கரங்களை உங்களுடைய கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டாம், அன்றி மூடத்தனமாக அதனைத் திறந்து விட்டு விடவும் வேண்டாம்.
[17:31] வறுமையின் அச்சத்தினால் உங்கள் குழந்தை களை நீங்கள் கொலை செய்ய வேண்டாம். அவர்களுக்கும், அத்துடன் உங்களுக்கும் நாமே வழங்குகின்றோம். அவர்களைக் கொல்வது மிகப்பெரும் குற்றமாகும்.