குர்ஆன் 17:29 — இஸ்ரவேலின் சந்ததியினர்
நீங்கள் நிந்திக்கப்பட்டவராகவும் மேலும் வருத்தப்பட்டவராகவும் முடிந்துவிடாதிருக்கும் பொருட்டு, கஞ்சத்தனமாக உங்கள் கரங்களை உங்களுடைய கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டாம், அன்றி மூடத்தனமாக அதனைத் திறந்து விட்டு விடவும் வேண்டாம்.
[17:28] உமது இரட்சகரின் கருணையை நீர் தேடியவராக இருக்கும்போது, அவர்களிடமிருந்து நீர் திரும்பிக்கொள்ள நேர்ந்தாலும், மிக நல்ல முறையில் நீங்கள் அவர்களை நடத்திட வேண்டும்.
[17:30] ஏனெனில் தான் தேர்ந்தெடுக்கின்ற எவரொரு வருக்கும் உமது இரட்சகர் வாழ்வாதாரங்களை அதிகரிக்கின்றார், மேலும் அதனைக் குறைக் கவும் செய்கின்றார். தன் படைப்புகளை அவர் முற்றிலும் நன்கறிந்தவர், பார்ப்பவர்.