குர்ஆன் 17:47 — இஸ்ரவேலின் சந்ததியினர்
அவர்கள் உம்மை கவனமாகக் கேட்கும் போது, அவர்கள் செவியேற்பது என்ன என்பதை நாம் நன்கறிகின்றோம், மேலும் அவர்கள் இரகசிய மாகச் சதியாலோசனை செய்யும் போது- நம்ப மறுப்பவர்கள், “ நீங்கள் புத்தி சுவாதீனமற்ற ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள்” என்று கூறுகின்றனர்.
[17:46] அவர்கள் அதனைப் புரிந்து கொள்வதை விட்டுத் தடுப்பதற்காக, அவர்களுடைய மனங்களைச் சுற்றிக் கவசங்களையும், அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தனத்தையும் நாம் அமைத்து விடுகின்றோம். மேலும் குர்ஆனை மட்டும்* பயன்படுத்தி, உமது இரட்சகரைப்பற்றி நீர் உபதேசித்தால், அவர்கள் வெறுப்பினால் வெருண்டோடி விடுகின்றனர்.
[17:48] அவர்கள் உம்மை வர்ணிக்கின்றனர் என்பதையும், மேலும் இது எவ்வாறு அவர்களைப் பாதையிலிருந்து வழிதவறச் செய்கின்றது என்பதையும் கவனித்துப் பார்ப்பீராக.