குர்ஆன் 17:51 — இஸ்ரவேலின் சந்ததியினர்
“ சாத்தியமற்றது என்று நீங்கள் கருதும் எந்த வகைப் படைப்பாக நீங்கள் மாறி விட்ட போதிலும்.” அப்போது அவர்கள், “ யார் நம்மைத் திரும்பக் கொண்டு வருவார்?” என்று கூறுவார்கள். “முதல் தடவை உங்களைப் படைத்தாரே அந்த ஒருவர்” என்று கூறுவீராக. பின்னர் அவர்கள் தங்கள் தலைகளை ஆட்டியவாறு, “ அது எப்போது நிகழும்?” என்று கூறுவார்கள். “ அது நீங்கள் நினைப்பதை விடவும் அருகில் இருக்கக்கூடும்“ என்று கூறுவீராக.
[17:50] கூறுவீராக, “நீங்கள் பாறைகளாகவோ அல்லது இரும்பாகவோ மாறி விட்ட போதிலும்.
[17:52] அவர் உங்களை வரவழைக்கும் அந்நாளில், அவரைப் புகழ்வதன் மூலம் நீங்கள் மறுமொழி யளிப்பீர்கள், மேலும் ஒரு குறுகிய காலம் தான் இந்த வாழ்வில் நீங்கள் நிலைத்திருந்தீர்கள் என்பதை அப்போது நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.