குர்ஆன் 17:50 — இஸ்ரவேலின் சந்ததியினர்
கூறுவீராக, “நீங்கள் பாறைகளாகவோ அல்லது இரும்பாகவோ மாறி விட்ட போதிலும்.
[17:49] அவர்கள், “ எலும்புகளாகவும், துகள்களாகவும் நாம் மாறிவிட்ட பின்னர், புதிதாக நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவோமா?!” என்று கூறினார்கள்.
[17:51] “ சாத்தியமற்றது என்று நீங்கள் கருதும் எந்த வகைப் படைப்பாக நீங்கள் மாறி விட்ட போதிலும்.” அப்போது அவர்கள், “ யார் நம்மைத் திரும்பக் கொண்டு வருவார்?” என்று கூறுவார்கள். “முதல் தடவை உங்களைப் படைத்தாரே அந்த ஒருவர்” என்று கூறுவீராக. பின்னர் அவர்கள் தங்கள் தலைகளை ஆட்டியவாறு, “ அது எப்போது நிகழும்?” என்று கூறுவார்கள். “ அது நீங்கள் நினைப்பதை விடவும் அருகில் இருக்கக்கூடும்“ என்று கூறுவீராக.