குர்ஆன் 17:61 — இஸ்ரவேலின் சந்ததியினர்
“ஆதாமின் முன் சிரம்பணியுங்கள்” என்று வானவர்களிடம் நாம் கூறிய போது, அவர்கள் சிரம் பணிந்தனர், சாத்தானைத் தவிர. அவன், “நீர் சேற்றால் படைத்த ஒருவருக்கு நான் சிரம்பணிய வேண்டுமா?” என்று கூறினான்.
[17:60] உமது இரட்சகர் மனிதர்களை முற்றிலும் கட்டுப்படுத்துகின்றார் என்பதை உமக்கு நாம் தெரியப்படுத்தினோம், மேலும் நாம் உமக்குக் காட்டிய காட்சியையும்*, குர்ஆனில் சபிக்கப் பட்டுள்ள அந்த மரத்தையும் மனிதர்களுக்கு ஒரு சோதனையாக நாம் ஆக்கினோம். அவர்களுக்கு பயபக்தியை ஊட்டுவதற்காக உறுதியான சான்றுகளை அவர்களுக்கு நாம் காட்டினோம், ஆனால் இது அவர்களுடைய எதிர்ப்பைத்தான் அதிகரித்தது.
[17:62] அவன், “எனக்கு மேலாக அவரை நீர் கௌரவப்படுத்தியதால், மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாள் வரை எனக்கு நீர் அவகாசம் அளிப்பீராயின், அவருடைய சந்ததியினர் அனைவரையும் நான் கைப்பற்றி விடுவேன், சிலரைத்தவிர” என்று கூறினான்.