Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:62 — இஸ்ரவேலின் சந்ததியினர்

அவன், “எனக்கு மேலாக அவரை நீர் கௌரவப்படுத்தியதால், மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாள் வரை எனக்கு நீர் அவகாசம் அளிப்பீராயின், அவருடைய சந்ததியினர் அனைவரையும் நான் கைப்பற்றி விடுவேன், சிலரைத்தவிர” என்று கூறினான்.

[17:61] “ஆதாமின் முன் சிரம்பணியுங்கள்” என்று வானவர்களிடம் நாம் கூறிய போது, அவர்கள் சிரம் பணிந்தனர், சாத்தானைத் தவிர. அவன், “நீர் சேற்றால் படைத்த ஒருவருக்கு நான் சிரம்பணிய வேண்டுமா?” என்று கூறினான்.

[17:63] அவர் கூறினார், “அப்படியென்றால் சென்றுவிடு; நீயும் உன்னைப் பின்பற்றியவர்களும் உங்களுக் குரிய கூலியாக நரகத்தைச் சென்றடைவீர்கள்; ஒரு நியாயமான கூலி.