குர்ஆன் 17:63 — இஸ்ரவேலின் சந்ததியினர்
அவர் கூறினார், “அப்படியென்றால் சென்றுவிடு; நீயும் உன்னைப் பின்பற்றியவர்களும் உங்களுக் குரிய கூலியாக நரகத்தைச் சென்றடைவீர்கள்; ஒரு நியாயமான கூலி.
[17:62] அவன், “எனக்கு மேலாக அவரை நீர் கௌரவப்படுத்தியதால், மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாள் வரை எனக்கு நீர் அவகாசம் அளிப்பீராயின், அவருடைய சந்ததியினர் அனைவரையும் நான் கைப்பற்றி விடுவேன், சிலரைத்தவிர” என்று கூறினான்.
[17:64] “உனது குரலைக் கொண்டு நீ அவர்களை வசீகரிக்கலாம், மேலும் அவர்களுக்கெதிராக உனது படைபலம் அனைத்தையும் உனது ஆட்கள் அனைவரையும் ஒன்று திரட்டிக்கொள், மேலும் அவர்களுடைய பணத்திலும் மற்றும் பிள்ளைகளிலும் பங்குபெற்றுக் கொள், மேலும் அவர்களுக்கு வாக்குறுதி கொடு. சாத்தான் வாக்களிக்கும் எந்த ஒன்றும் ஒரு மாயையைக் காட்டிலும் அதிகம் எதுவுமில்லை.