குர்ஆன் 17:64 — இஸ்ரவேலின் சந்ததியினர்
“உனது குரலைக் கொண்டு நீ அவர்களை வசீகரிக்கலாம், மேலும் அவர்களுக்கெதிராக உனது படைபலம் அனைத்தையும் உனது ஆட்கள் அனைவரையும் ஒன்று திரட்டிக்கொள், மேலும் அவர்களுடைய பணத்திலும் மற்றும் பிள்ளைகளிலும் பங்குபெற்றுக் கொள், மேலும் அவர்களுக்கு வாக்குறுதி கொடு. சாத்தான் வாக்களிக்கும் எந்த ஒன்றும் ஒரு மாயையைக் காட்டிலும் அதிகம் எதுவுமில்லை.
[17:63] அவர் கூறினார், “அப்படியென்றால் சென்றுவிடு; நீயும் உன்னைப் பின்பற்றியவர்களும் உங்களுக் குரிய கூலியாக நரகத்தைச் சென்றடைவீர்கள்; ஒரு நியாயமான கூலி.
[17:65] “எனது அடியார்களைப் பொறுத்தவரை, அவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமுமில்லை.” ஒரு பாதுகாவலராக உமது இரட்சகர் போதுமானவர்.