குர்ஆன் 17:67 — இஸ்ரவேலின் சந்ததியினர்
நடுக்கடலில் நீங்கள் கஷ்டத்தில் சிக்கிக் கொண்டால், நீங்கள் உங்களுடைய இணைத் தெய்வங்களை மறந்து விடுகின்றீர்கள், மேலும் கலப்பற்றவாறு அவரை மட்டுமே இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றீர்கள். ஆனால் அவர் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்து விட்ட உடன், நீங்கள் மீண்டும் உங்கள் பழைய நிலைக்குத் திரும்பி விடுகின்றீர்கள். உண்மையில், மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
[17:66] உமது இரட்சகர்தான் அவருடைய அருட்கொ டைகளை நீங்கள் தேடிக்கொள்ளும் பொருட்டு, பெருங்கடலில்* கப்பல்களை மிதக்கும்படி செய்தவர். அவர் உங்கள் பால் மிக்க கருணை யாளராக இருக்கின்றார்.
[17:68] கரையின் மீது, நிலப்பரப்பு உங்களை விழுங்கிவிடும்படி அவர் செய்து விடமாட்டார் என்றோ?, அல்லது உங்கள் மீது ஒரு சூறைக்காற்றை அனுப்பி, பாதுகாப்பவர் எவரையும் நீங்கள் காணாதபடி அவர் ஆக்கிவிடமாட்டார் என்றோ நீங்கள் உத்தரவாதம் கொண்டிருக்கின்றீர்களா?