Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:69 — இஸ்ரவேலின் சந்ததியினர்

இன்னொரு முறை அவர் உங்களைக் கடலுக்குத் திருப்பி, பின்னர் உங்களுடைய நம்பிக்கை யின்மையின் காரணமாக உங்களை மூழ்கடித்து விடக் கூடிய ஒரு புயல்காற்றை அனுப்பி விட மாட்டார் என்று நீங்கள் உத்தரவாதம் கொண்டிருக்கின்றீர்களா? இது நிகழ்ந்து விட்டால், மற்றுமொரு வாய்ப்பை உங்களுக்கு நாம் தர மாட்டோம்.

[17:68] கரையின் மீது, நிலப்பரப்பு உங்களை விழுங்கிவிடும்படி அவர் செய்து விடமாட்டார் என்றோ?, அல்லது உங்கள் மீது ஒரு சூறைக்காற்றை அனுப்பி, பாதுகாப்பவர் எவரையும் நீங்கள் காணாதபடி அவர் ஆக்கிவிடமாட்டார் என்றோ நீங்கள் உத்தரவாதம் கொண்டிருக்கின்றீர்களா?

[17:70] ஆதாமின் சந்ததியினரை நாம் கௌரவப் படுத்தினோம், மேலும் கரையிலும் மற்றும் கடலிலும் அவர்களுக்கு சவாரிகளை வழங்கினோம். நல்ல வாழ்வாதாரங்களை அவர்களுக்கு நாம் வழங்கினோம், மேலும் நமது படைப்பினங்கள் பலவற்றை விட அவர்களுக்கு மிகப்பெரும் மேன்மைகளைத் தந்தோம்.