குர்ஆன் 17:70 — இஸ்ரவேலின் சந்ததியினர்
وَلَقَد كَرَّمنا بَنى ءادَمَ وَحَمَلنٰهُم فِى البَرِّ وَالبَحرِ وَرَزَقنٰهُم مِنَ الطَّيِّبٰتِ وَفَضَّلنٰهُم عَلىٰ كَثيرٍ مِمَّن خَلَقنا تَفضيلًا
ஆதாமின் சந்ததியினரை நாம் கௌரவப் படுத்தினோம், மேலும் கரையிலும் மற்றும் கடலிலும் அவர்களுக்கு சவாரிகளை வழங்கினோம். நல்ல வாழ்வாதாரங்களை அவர்களுக்கு நாம் வழங்கினோம், மேலும் நமது படைப்பினங்கள் பலவற்றை விட அவர்களுக்கு மிகப்பெரும் மேன்மைகளைத் தந்தோம்.
[17:69] இன்னொரு முறை அவர் உங்களைக் கடலுக்குத் திருப்பி, பின்னர் உங்களுடைய நம்பிக்கை யின்மையின் காரணமாக உங்களை மூழ்கடித்து விடக் கூடிய ஒரு புயல்காற்றை அனுப்பி விட மாட்டார் என்று நீங்கள் உத்தரவாதம் கொண்டிருக்கின்றீர்களா? இது நிகழ்ந்து விட்டால், மற்றுமொரு வாய்ப்பை உங்களுக்கு நாம் தர மாட்டோம்.
[17:71] ஒவ்வொரு சமூகத்தினரையும், அவர்களுடைய பதிவேடுகளுடன் நாம் வரவழைக்கும் அந்நாள் வரும். நன்னெறியின் பதிவேடு கொடுக்கப் பட்டோரைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் பதிவேடுகளைப் படிப்பார்கள் மேலும் சிறிதளவு அநீதியையும் அனுபவிக்க மாட்டார்கள்.