குர்ஆன் 17:75 — இஸ்ரவேலின் சந்ததியினர்
அதனை நீர் செய்திருந்தால், இந்த வாழ்விலும், மேலும் மரணத்திற்குப் பின்னரும் உமது தண்டனையை நாம் இருமடங்காக ஆக்கியிருப் போம், மேலும் நமக்கெதிராக உமக்கு உதவி செய்ய எவர் ஒருவரையும் நீர் கண்டிருக்க மாட்டீர்.
[17:74] உம்மை நாம் பலப்படுத்தி இருக்காவிட்டால், நீர் கிட்டத்தட்ட சிறிதேனும் அவர்கள் பக்கம் சாய்ந்திருப்பீர்.
[17:76] உம்மைவிட்டு நீங்கிக் கொள்வதற்காக, உம்மை நாட்டைவிட்டு கிட்டத்தட்ட அவர்கள் வெளி யேற்றி விட்டனர், அவ்வாறு நீர் விலகிச் சென்றவுடன் அவர்கள் தங்களுடைய பழைய நிலைக்குத் திரும்பிவிட இயலும் என்பதற்காக.