குர்ஆன் 17:77 — இஸ்ரவேலின் சந்ததியினர்
உமக்கு முன்னர் நாம் அனுப்பிய அனைத்துத் தூதர்களுக்கும், இந்த நிலைதான் தவறாது இருந்து வந்தது, மேலும் நமது வழிமுறை ஒருபோதும் மாறுவதில்லை என்பதை நீர் கண்டு கொள்வீர்.
[17:76] உம்மைவிட்டு நீங்கிக் கொள்வதற்காக, உம்மை நாட்டைவிட்டு கிட்டத்தட்ட அவர்கள் வெளி யேற்றி விட்டனர், அவ்வாறு நீர் விலகிச் சென்றவுடன் அவர்கள் தங்களுடைய பழைய நிலைக்குத் திரும்பிவிட இயலும் என்பதற்காக.
[17:78] நண்பகலில் சூரியன் அதன் உச்சியிலிருந்து சாய்ந்து அஸ்தமனத்தை நோக்கி அது நகரும் பொழுது நீர் தொடர்புத் தொழுகையைக் (ஸலாத்) கடைப்பிடிக்க வேண்டும். இன்னும் அதிகாலை யில் நீங்கள் குர்ஆன் (ஓதுதலை) கடைப் பிடிக்கவும் வேண்டும். அதிகாலையில் குர்ஆன் (ஓதுதல்) சாட்சி அளிக்கின்றது.