Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:8 — இஸ்ரவேலின் சந்ததியினர்

உங்கள் இரட்சகர் உங்கள் மீது தன் கருணையைப் பொழிகின்றார். ஆனால் நீங்கள் வரம்பு மீறலுக்குத் திரும்பி விட்டால், தண்டனை யைக் கொண்டு நாம் எதிர்கொள்வோம். நம்பமறுப்பவர்களுக்கான இறுதித்தங்குமிடமாக ஜஹன்னாவை நாம் நியமித்திருக்கின்றோம்.

[17:7] “நீங்கள் நன்னெறிகளை செய்தால், உங்கள் சொந்த நலனுக்கே நீங்கள் நன்னெறிகளை செய்து கொள்கின்றீர்கள், ஆனால் நீங்கள் தீமைகள் செய்தால் உங்களுடைய சொந்த கேட்டிற்காகத் தான் அவ்வாறு நீங்கள் செய்கின்றீர்கள். இவ்விதமாக, இரண்டாவது முறை நிகழ்ந்தேறும் பொழுது, அவர்கள் உங்களைத் தோற்கடிப்பார்கள், மேலும் முதல் முறை அவர்கள் செய்ததைப் போலவே, மஸ்ஜிதில் நுழைவார்கள். நீங்கள் சேகரித்த இலாபங்கள் அனைத்தையும் அவர்கள் துடைத்தெடுத்து விடுவார்கள்.”

[17:9] இந்தக் குர்ஆன் மிகச் சிறந்த பாதையை நோக்கி வழிநடத்துகின்றது, மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்தும் நம்பிக்கையாளர் களுக்கு, அவர்கள் மகத்தானதொரு பிரதி பலனுக்கு தகுதியானவர்களாகி விட்டார்கள் என்ற நற்செய்தியைக் கொண்டு வருகின்றது.