குர்ஆன் 17:80 — இஸ்ரவேலின் சந்ததியினர்
மேலும், “ என் இரட்சகரே, கௌரவமானதொரு நுழைவிற்குள் என்னை அனுமதிப்பீராக, மேலும் கௌரவமானதொரு புறப்பாட்டுடன் என்னைப் புறப்பட அனுமதிப்பீராக, மேலும் உம்மிடமிருந்து சக்திமிக்கதொரு ஆதரவை எனக்கு வழங்குவீராக” என்று கூறுவீராக.
[17:79] மேலதிகமான நன்மைக்காக, உமது இரட்சகர் ஒரு கௌரவமான அந்தஸ்திற்கு உம்மை உயர்த்தக் கூடும் என்பதற்காக, இரவுப் பொழுதில் நீர் தியானம் செய்ய வேண்டும்.
[17:81] “சத்தியம் வென்றுவிட்டது, மேலும் அசத்தியம் மறைந்துவிட்டது; தவிர்த்துவிட முடியாதவாறு அசத்தியம் மறைந்தே போகும்,” என்று பிரகடனப்படுத்துவீராக.