குர்ஆன் 17:88 — இஸ்ரவேலின் சந்ததியினர்
قُل لَئِنِ اجتَمَعَتِ الإِنسُ وَالجِنُّ عَلىٰ أَن يَأتوا بِمِثلِ هٰذَا القُرءانِ لا يَأتونَ بِمِثلِهِ وَلَو كانَ بَعضُهُم لِبَعضٍ ظَهيرًا
“ எல்லா மனிதர்களும், மற்றும் எல்லா ஜின்களும் இதுபோன்ற ஒரு குர்ஆனைக் கொண்டு வருவதற்காக ஒன்று சேர்ந்தாலும், இதைப் போன்ற எதையும் அவர்களால் ஒரு போதும் கொண்டு வர முடியாது, அவர்கள் ஒருவர் மற்றொருவருக்கு எவ்வளவு உதவிகள் அளித்துக் கொண்டாலும் அது பொருட்டல்ல” என்று கூறுவீராக.
[17:87] இது உம் இரட்சகரிடமிருந்து கருணையே அன்றி வேறில்லை. உம்மீதான அவருடைய அருட் கொடைகள் மிகப்பெரியதாக உள்ளன.
[17:89] இந்தக் குர்ஆனில் மனிதர்களுக்காக நாம் எல்லா விதமான உதாரணங்களையும் எடுத்துரைத் திருக்கின்றோம், ஆனால் பெரும்பாலான மனிதர்கள் நம்ப மறுத்தலையே வலியுறுத்து கின்றனர்.