குர்ஆன் 18:109 — குகை
“பெருங்கடலே என் இரட்சகரின் வார்த்தை களுக்கு மையாக ஆனபோதிலும், என் இரட்சகரின் வார்த்தைகள் தீர்ந்துபோகும் முன்னர் பெருங்கடல் தீர்ந்து போகும், மையை நாம் இருமடங்கு வழங்கினாலும் சரியே” என்று கூறுவீராக.
[18:108] நிரந்தரமாக அவர்கள் அங்கே தங்கியிருப் பார்கள்; அதற்குப் பதிலாக வேறு எதையும் அவர்கள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள்.
[18:110] “உங்கள் தெய்வம் ஒரே தெய்வம் என்று உள்ளுணர்வளிக்கப்பட்டிருக்கும் நான், உங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. தங்கள் இரட்சகரைச் சந்திப்பதை எதிர்ப்பார்த்திருப்பவர்கள் நன்னெறியான காரியங்களைச் செய்யவும், மேலும் தனது இரட்சகருடன் வேறு தெய்வம் எதனையும் ஒருபோதும் வழிபடாதிருக்கவும் வேண்டும்” என்று கூறுவீராக.