குர்ஆன் 18:13 — குகை
சத்தியம் நிறைந்ததாக, அவர்களுடைய சரித்திரத்தை உமக்கு நாம் எடுத்துரைக்கின் றோம். அவர்கள் தங்களுடைய இரட்சகர் மீது நம்பிக்கை கொண்ட இளைஞர்கள், இன்னும் அவர்களுடைய வழிகாட்டலை நாம் அதிகரித்தோம்.
[18:12] பின்னர் இரு தரப்பினரில், அங்கே அவர்கள் தங்கியிருந்த கால அளவைக் கணக்கிட முடிந்தவர்கள் யார் என்பதைக் காண்பதற்காக அவர்களை நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பி னோம்.
[18:14] “வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகர்தான் எங்களுடைய ஒரே இரட்சகர். அவருடன் வேறு தெய்வம் எதனையும் நாங்கள் ஒருபோதும் வழிபட மாட்டோம். இல்லையென்றால், நாங்கள் வெகுதூரம் வழிதவறியவர்களாவோம்”: என்று அவர்கள் எழுந்து நின்று பிரகடனம் செய்தபோது அவர்களுடைய இதயங்களை நாம் பலப்படுத்தினோம்.