Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:14 — குகை

“வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகர்தான் எங்களுடைய ஒரே இரட்சகர். அவருடன் வேறு தெய்வம் எதனையும் நாங்கள் ஒருபோதும் வழிபட மாட்டோம். இல்லையென்றால், நாங்கள் வெகுதூரம் வழிதவறியவர்களாவோம்”: என்று அவர்கள் எழுந்து நின்று பிரகடனம் செய்தபோது அவர்களுடைய இதயங்களை நாம் பலப்படுத்தினோம்.

[18:13] சத்தியம் நிறைந்ததாக, அவர்களுடைய சரித்திரத்தை உமக்கு நாம் எடுத்துரைக்கின் றோம். அவர்கள் தங்களுடைய இரட்சகர் மீது நம்பிக்கை கொண்ட இளைஞர்கள், இன்னும் அவர்களுடைய வழிகாட்டலை நாம் அதிகரித்தோம்.

[18:15] “இதோ, நமது சமூகத்தார் அவருடன் தெய்வங்களை அமைத்துக் கொள்கின்றனர். அவர்களுடைய நிலைக்கு ஆதாரமாகச் சான்று எதையேனும் அவர்களால் மட்டும் வழங்க முடிந்தால்! பொய்களை இட்டுக்கட்டி மேலும் அவற்றைக் கடவுள் மீது சாட்டுகின்ற ஒருவனைவிட மிகத் தீயவன் வேறு யார்?