குர்ஆன் 18:15 — குகை
“இதோ, நமது சமூகத்தார் அவருடன் தெய்வங்களை அமைத்துக் கொள்கின்றனர். அவர்களுடைய நிலைக்கு ஆதாரமாகச் சான்று எதையேனும் அவர்களால் மட்டும் வழங்க முடிந்தால்! பொய்களை இட்டுக்கட்டி மேலும் அவற்றைக் கடவுள் மீது சாட்டுகின்ற ஒருவனைவிட மிகத் தீயவன் வேறு யார்?
[18:14] “வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகர்தான் எங்களுடைய ஒரே இரட்சகர். அவருடன் வேறு தெய்வம் எதனையும் நாங்கள் ஒருபோதும் வழிபட மாட்டோம். இல்லையென்றால், நாங்கள் வெகுதூரம் வழிதவறியவர்களாவோம்”: என்று அவர்கள் எழுந்து நின்று பிரகடனம் செய்தபோது அவர்களுடைய இதயங்களை நாம் பலப்படுத்தினோம்.
[18:16] “அவர்களையும், கடவுள்*-ஐ விடுத்து மற்றவர்களை அவர்கள் வழிபடுவதையும் நீங்கள் தவிர்த்துக் கொள்ள விரும்புவதால், இக்குகையில் நாம் புகலிடம் எடுத்துக் கொள்வோம். உங்களுடைய இரட்சகர் தனது கருணையை உங்கள் மீது பொழியவும், மேலும் சரியான முடிவை நோக்கி உங்களைச் செலுத்தவும் செய்வாராக.”