Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:16 — குகை

“அவர்களையும், கடவுள்*-ஐ விடுத்து மற்றவர்களை அவர்கள் வழிபடுவதையும் நீங்கள் தவிர்த்துக் கொள்ள விரும்புவதால், இக்குகையில் நாம் புகலிடம் எடுத்துக் கொள்வோம். உங்களுடைய இரட்சகர் தனது கருணையை உங்கள் மீது பொழியவும், மேலும் சரியான முடிவை நோக்கி உங்களைச் செலுத்தவும் செய்வாராக.”

[18:15] “இதோ, நமது சமூகத்தார் அவருடன் தெய்வங்களை அமைத்துக் கொள்கின்றனர். அவர்களுடைய நிலைக்கு ஆதாரமாகச் சான்று எதையேனும் அவர்களால் மட்டும் வழங்க முடிந்தால்! பொய்களை இட்டுக்கட்டி மேலும் அவற்றைக் கடவுள் மீது சாட்டுகின்ற ஒருவனைவிட மிகத் தீயவன் வேறு யார்?

[18:17] அவர்கள் அதிலுள்ள குழியில் உறங்கிக் கொண்டிருந்தபோது, சூரியன் அதன் உதயத்தின் போது அவர்களுடைய குகையின் வலப் புறமிருந்து வந்து கொண்டிருந்ததையும், மேலும் அதன் அஸ்தமனத்தின் பொழுது அவர்களுடைய இடப்புறமிருந்து பிரகாசித்ததையும் நீர் கண்டிருக்க இயலும். இது கடவுள்-ன் அற்புதங்களில் ஒன்றாகும்*. எவரொருவரைக் கடவுள் வழிநடத்துகின்றாரோ, அவரே உண்மையில் வழிநடத்தப்பட்டவர், மேலும் எவரொருவரை அவர் வழிகேட்டில் அனுப்பி விடுகின்றாரோ அவருக்கு வழிகாட்டும் ஓர் ஆசிரியரை நீர் காணமாட்டீர்.