குர்ஆன் 18:17 — குகை
அவர்கள் அதிலுள்ள குழியில் உறங்கிக் கொண்டிருந்தபோது, சூரியன் அதன் உதயத்தின் போது அவர்களுடைய குகையின் வலப் புறமிருந்து வந்து கொண்டிருந்ததையும், மேலும் அதன் அஸ்தமனத்தின் பொழுது அவர்களுடைய இடப்புறமிருந்து பிரகாசித்ததையும் நீர் கண்டிருக்க இயலும். இது கடவுள்-ன் அற்புதங்களில் ஒன்றாகும்*. எவரொருவரைக் கடவுள் வழிநடத்துகின்றாரோ, அவரே உண்மையில் வழிநடத்தப்பட்டவர், மேலும் எவரொருவரை அவர் வழிகேட்டில் அனுப்பி விடுகின்றாரோ அவருக்கு வழிகாட்டும் ஓர் ஆசிரியரை நீர் காணமாட்டீர்.
[18:16] “அவர்களையும், கடவுள்*-ஐ விடுத்து மற்றவர்களை அவர்கள் வழிபடுவதையும் நீங்கள் தவிர்த்துக் கொள்ள விரும்புவதால், இக்குகையில் நாம் புகலிடம் எடுத்துக் கொள்வோம். உங்களுடைய இரட்சகர் தனது கருணையை உங்கள் மீது பொழியவும், மேலும் சரியான முடிவை நோக்கி உங்களைச் செலுத்தவும் செய்வாராக.”
[18:18] அவர்கள் உண்மையில் உறங்கிக் கொண்டிருந்த போதும், அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாகவே நீர் எண்ணியிருப்பீர். அவர்கள் நடுவே அவர்களுடைய நாய் அதன் முன்னங்கால்களை விரித்திருந்த அதே சமயம், அவர்களை நாம் வலப்புறமும் மற்றும் இடப்புறமும் புரட்டினோம். அவர்களை நீர் பார்த்திருந்தால், திகிலினால் அறையப் பட்டவராக, அவர்களை விட்டு நீர் வெருண்டோடி இருப்பீர்.