குர்ஆன் 18:23 — குகை
எதிர் காலத்தில் எந்த ஒன்றையும் நீர் செய்வீர் என்று நீர் கூற வேண்டாம்,
[18:22] சிலர், “அவர்கள் மூவராக இருந்தனர்; அவர் களுடைய நாய் நான்காவதாக இருந்தது,” என்று கூறுவர். அதே சமயம் யூகம் செய்தவர் களாகவே மற்றவர்கள், “ஐந்து; அவர்களுடைய நாய் ஆறாவதாக இருந்தது” என்று கூறுவர். மற்றவர்கள், “ஏழு”, மேலும் எட்டாவதாக இருந் தது அவர்களுடைய நாய் என்று கூறினார்கள். “என் இரட்சகர்தான் அவர்களுடைய எண்ணிக்கையை நன்கறிந்தவர்” என்று கூறுவீராக. மிகச் சிலர் மட்டுமே சரியான அந்த எண்ணிக்கையை அறிந்திருக்கின்றனர். ஆகையால், அவர்களுடன் வாதித்துக் கொண்டிருக்காதீர்; அவர்களுடைய போக்கிலேயே சென்று விடும். எவர் ஒருவருடனும் நீர் இது குறித்து ஆலோசிக்க வேண்டாம்.
[18:24] “கடவுள் நாடினால்,” என்று கூறாமல்*. இதனைச் செய்ய நீர் மறந்து விட்டால், உடனடியாக உமது இரட்சகரை நீர் நினைவு கூர்வதோடு, மேலும் “அடுத்த முறை இதை விடச் சிறப்பாகச் செய்யும்படி என் இரட்சகர் என்னை வழிநடத்துவாராக” என்று கூறுவீராக.