Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:26 — குகை

“எவ்வளவு காலம் அவர்கள் அங்கே தங்கி யிருந்தனர் என்பதை கடவுள் தான் நன் கறிந்தவர்” என்று கூறுவீராக. வானங்கள் மற்றும் பூமியில் உள்ள எல்லா இரகசியங் களையும் அவர் அறிந்திருக்கின்றார். அவருடைய கருணையினால் தான் உங்களால் பார்க்க முடிகின்றது; அவருடைய கருணையினால் தான் உங்களால் செவியேற்க முடிகின்றது. அவருடன் இரட்சகராகவும், எஜமானராகவும் எவரும் இல்லை, மேலும் தனது ஆட்சியதி காரத்தில் பங்கு கொள்வதற்குப் பங்குதாரர்கள் எவரையும் அவர் ஒருபோதும் அனுமதிப்ப தில்லை.

[18:25] அவர்கள் அவர்களுடைய குகையில் ஒன்பது அதிகமாக* முந்நூறு வருடங்கள் தங்கி யிருந்தனர்.

[18:27] உம்முடைய இரட்சகரின் வேதத்தில் உமக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றை நீர் ஓதி வர வேண்டும். எதுவும் அவருடைய வார்த்தைகளை மாற்றிவிட முடியாது, மேலும் அதனைத் தவிர வேறு ஆதாரம் எதையும் நீர் காண வேண்டாம்.