குர்ஆன் 18:25 — குகை
அவர்கள் அவர்களுடைய குகையில் ஒன்பது அதிகமாக* முந்நூறு வருடங்கள் தங்கி யிருந்தனர்.
[18:24] “கடவுள் நாடினால்,” என்று கூறாமல்*. இதனைச் செய்ய நீர் மறந்து விட்டால், உடனடியாக உமது இரட்சகரை நீர் நினைவு கூர்வதோடு, மேலும் “அடுத்த முறை இதை விடச் சிறப்பாகச் செய்யும்படி என் இரட்சகர் என்னை வழிநடத்துவாராக” என்று கூறுவீராக.
[18:26] “எவ்வளவு காலம் அவர்கள் அங்கே தங்கி யிருந்தனர் என்பதை கடவுள் தான் நன் கறிந்தவர்” என்று கூறுவீராக. வானங்கள் மற்றும் பூமியில் உள்ள எல்லா இரகசியங் களையும் அவர் அறிந்திருக்கின்றார். அவருடைய கருணையினால் தான் உங்களால் பார்க்க முடிகின்றது; அவருடைய கருணையினால் தான் உங்களால் செவியேற்க முடிகின்றது. அவருடன் இரட்சகராகவும், எஜமானராகவும் எவரும் இல்லை, மேலும் தனது ஆட்சியதி காரத்தில் பங்கு கொள்வதற்குப் பங்குதாரர்கள் எவரையும் அவர் ஒருபோதும் அனுமதிப்ப தில்லை.