குர்ஆன் 18:27 — குகை
உம்முடைய இரட்சகரின் வேதத்தில் உமக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றை நீர் ஓதி வர வேண்டும். எதுவும் அவருடைய வார்த்தைகளை மாற்றிவிட முடியாது, மேலும் அதனைத் தவிர வேறு ஆதாரம் எதையும் நீர் காண வேண்டாம்.
[18:26] “எவ்வளவு காலம் அவர்கள் அங்கே தங்கி யிருந்தனர் என்பதை கடவுள் தான் நன் கறிந்தவர்” என்று கூறுவீராக. வானங்கள் மற்றும் பூமியில் உள்ள எல்லா இரகசியங் களையும் அவர் அறிந்திருக்கின்றார். அவருடைய கருணையினால் தான் உங்களால் பார்க்க முடிகின்றது; அவருடைய கருணையினால் தான் உங்களால் செவியேற்க முடிகின்றது. அவருடன் இரட்சகராகவும், எஜமானராகவும் எவரும் இல்லை, மேலும் தனது ஆட்சியதி காரத்தில் பங்கு கொள்வதற்குப் பங்குதாரர்கள் எவரையும் அவர் ஒருபோதும் அனுமதிப்ப தில்லை.
[18:28] அவரை மட்டும் தேடியவர்களாக, இரவும் பகலும் தங்கள் இரட்சகரை வழிபடுவோருடன் இருப்பதற்கு உம்மை நீர் நிர்பந்தித்துக் கொள்ள வேண்டும். இவ்வுலகின் வீண்பகட்டுக்களைத் தேடியவர்களாக, அவர்களிடமிருந்து உமது கண்களைத் திருப்பிக் கொள்ள வேண்டாம். அன்றியும் எவர்களுடைய இதயங்களை நம்முடைய தூதுச் செய்தியில் கவனமற்றதாக நாம் ஆக்கிவிட்டோமோ அவர்களுக்கும்; தன் சுய விருப்பங்களைப் பின்பற்றுபவர்களுக்கும், மேலும் தங்களுடைய முன்னுரிமைகள் குழம்பிப் போனவர்களுக்கும் நீர் கீழ்ப்படிய வேண்டாம்.