குர்ஆன் 18:40 — குகை
“என் இரட்சகர் உன்னுடைய தோட்டத்தை விடவும் மேலானதை எனக்கு வழங்கக் கூடும். உன்னுடைய தோட்டத்தைத் துடைத்தெடுத்து விட்டு, முற்றிலும் அதனை தரிசாக்கி விட்டு விடக்கூடிய ஒரு கடும் புயல்காற்றை அவர் விண்ணிலிருந்து அனுப்பி வைக்கக் கூடும்.
[18:39] “உனது தோட்டத்திற்குள் நீ நுழைந்த போது, ‘இது, கடவுள் எனக்குத் தந்தது (மாஷா அல்லாஹ்). கடவுள்-ஐத் தவிர எவர் ஒருவரும் சக்தியைப் பெற்றிருக்கவில்லை (லா குவ்வத்த இல்லாபில்லாஹ்)’ என்று நீ கூறியிருக்க வேண்டும். உன்னை விடக் குறைவான செல்வத்தையும், குறைவான பிள்ளைகளையும் நான் கொண்டிருப்பதை நீ காணலாம்.
[18:41] “அல்லது, உன் கைகளுக்கெட்டாத ஆழத்திற்கு, அதன் தண்ணீர் கீழிறங்கி விடக்கூடும்”.