குர்ஆன் 18:39 — குகை
“உனது தோட்டத்திற்குள் நீ நுழைந்த போது, ‘இது, கடவுள் எனக்குத் தந்தது (மாஷா அல்லாஹ்). கடவுள்-ஐத் தவிர எவர் ஒருவரும் சக்தியைப் பெற்றிருக்கவில்லை (லா குவ்வத்த இல்லாபில்லாஹ்)’ என்று நீ கூறியிருக்க வேண்டும். உன்னை விடக் குறைவான செல்வத்தையும், குறைவான பிள்ளைகளையும் நான் கொண்டிருப்பதை நீ காணலாம்.
[18:38] “என்னைப் பொறுத்தவரை, கடவுள் தான் எனது இரட்சகர், மேலும் என் இரட்சகருடன் வேறு எந்த தெய்வத்தையும் நான் ஒருபோதும் அமைத்துக் கொள்ள மாட்டேன்.
[18:40] “என் இரட்சகர் உன்னுடைய தோட்டத்தை விடவும் மேலானதை எனக்கு வழங்கக் கூடும். உன்னுடைய தோட்டத்தைத் துடைத்தெடுத்து விட்டு, முற்றிலும் அதனை தரிசாக்கி விட்டு விடக்கூடிய ஒரு கடும் புயல்காற்றை அவர் விண்ணிலிருந்து அனுப்பி வைக்கக் கூடும்.