குர்ஆன் 18:56 — குகை
தெளிவாக நற்செய்தியை அறிவிப்பவர் களாகவும், அதே சமயம் எச்சரிப்பவர்களாகவும் மட்டுமே நாம் தூதர்களை அனுப்புகின்றோம். நம்பமறுப்பவர்கள் சத்தியத்தைத் தோற்கடிப்ப தற்காக, பொய்களைக் கொண்டு வாதிடு கின்றனர், மேலும் அவர்கள் என்னுடைய சான்றுகள் மற்றும் எச்சரிக்கைகளை வீணானதென எடுத்துக் கொள்கின்றனர்.
[18:55] மனிதர்களை, வழிகாட்டல் அவர்களிடம் வந்த போது, நம்பிக்கை கொள்வதிலிருந்தும், மேலும் தங்களுடைய இரட்சகரிடம் பாவ மன்னிப்பைத் தேடுவதிலிருந்தும் தடுத்தது, முந்திய தலை முறையினருக்கான அதே (விதமான அற்புதங் களைக்) காண வேண்டுமென்று அவர்கள் கோரியது, அல்லது தண்டனையை முன்கூட்டி யே காணவேண்டும் என்று சவால் விட்டது தவிர வேறு எதுவும் இல்லை.
[18:57] தங்கள் இரட்சகரின் சான்றுகளால் நினைவூட்டப்பட்டு, பின்னர் தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்ளாது, அவற்றைப் புறக்கணிப்பவர்களை விட மிகத் தீயவர்கள் யார்? அதன் விளைவாக, இதனை (இந்தக் குர்ஆனை) புரிந்து கொள்வதை விட்டும் அவர்களை தடுப்பதற்காக அவர் களுடைய இதயங்களின் மீது கவசங்களையும், மேலும் அவர்களுடைய காதுகளில் செவிட்டுத் தனத்தையும் நாம் அமைத்து விடுகின்றோம். இதனால், அவர்களை வழிநடத்துவதற்காக நீர் என்ன செய்கின்றீர் என்பது பொருட்டல்ல, அவர்கள் ஒருபோதும் எக்காலத்திலும் வழி நடத்தப்படமாட்டார்கள்.