குர்ஆன் 18:65 — குகை
நாம் கருணையைக் கொண்டு அருள்பாலித் திருந்த, மேலும் அவர்மீது நம்முடைய சொந்த அறிவிலிருந்து வழங்கப்பட்டிருந்த நமது அடியார்களில் ஒருவரை அவர்கள் கண்டனர்.
[18:64] (மோஸஸ்), “அதுதான் நாம் தேடிக் கொண்டிருந்த இடமாகும்” என்று கூறினார். அவர்கள் தங்கள் காலடிச் சுவடுகளைத் தேடியவாறு திரும்பிச் சென்றனர்.
[18:66] மோஸஸ் அவரிடம், “உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வழிகாட்டலிலிருந்தும் மற்றும் அறிவிலிருந்தும் சிலவற்றை நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுக்கும் பொருட்டு, நான் உம்மைப் பின்தொடரலாமா?” என்று கூறினார்.