Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:83 — குகை

ஜுல்-கர்னைன் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “அவருடைய சரித்திரத்தில் சிலவற்றை உங்களுக்கு நான் விவரிக் கின்றேன்” என்று கூறுவீராக.

[18:82] “அந்த மதிற்சுவரைப் பொறுத்தவரை, அது அந்நகரில் உள்ள இரு அநாதைச் சிறுவர் களுக்கு உரியதாக இருந்தது. அதன்கீழ், அவர்களுக்குரிய ஒரு புதையல் இருந்தது. அவர்களுடைய தந்தை ஒரு நன்னெறியான மனிதராக இருந்த காரணத்தால், அவர்கள் வளர்ந்து முழு வலிமை அடைந்த பின்னர், அவர்களுடைய அப்புதையலை வெளியில் எடுத்துக் கொள்ள வேண்டும் என உம் இரட்சகர் நாடினார். உம் இரட்சகரிடமிருந்துள்ள கருணை இத்தகையதேயாகும். அதில் எந்த ஒன்றையும் நான் என் சுயவிருப்பப்படி செய்யவில்லை. உம்மால் பொறுமையாக இருக்க முடியாத விஷயங்களின் விளக்கம் இதுவேயாகும்.”

[18:84] நாம் அவருக்கு பூமியின் மேல் அதிகாரத்தை அளித்தோம், மேலும் எல்லாவிதமான உபகர ணங்களையும் அவருக்கு வழங்கினோம்.