குர்ஆன் 19:10 — மேரி
அவர், “என் இரட்சகரே, எனக்கு ஓர் அறி குறியைத் தருவீராக” என்று கூறினார். அவர், “உமக்குரிய அறிகுறியானது, தொடர்ந்த மூன்று இரவுகளுக்கு மக்களிடம் நீர் பேசமாட்டீர் என்பதாகும்” என்று கூறினார்.
[19:9] அவர், “உமது இரட்சகர்: இவ்விதமாக அதனைச் செய்வது எனக்கு எளிதானதே. இதற்கு முன்னர் நீர் எதுவுமாக இல்லாதிருந்த போதே, உம்மை நான் படைத்தேன்” என்று கூறியதாக கூறினார்.
[19:11] புனிதமான இடத்திலிருந்து வெளியில், அவர் தன் குடும்பத்தாரிடம் வந்தார், மேலும் அவர்களிடம் : “இரவும் பகலும் (கடவுளைத்) தியானம் செய்யுங்கள்” என்று சைகை செய்தார்.