குர்ஆன் 19:38 — மேரி
நம்மை சந்திக்க அவர்கள் வரும்போது அவர்களைக் கேட்கவும் மேலும் அவர்களைப் பார்க்கவும் காத்திருப்பீராக. வரம்பு மீறியவர்கள் அந்நாளில் முற்றிலும் தோல்வியுற்றவர்களாக இருப்பார்கள்.
[19:37] (இயேசுவின் தனித்தன்மை குறித்து) வெவ்வேறு தரப்பினர் தங்களுக்கிடையில் தர்க்கித்துக் கொண்டனர். ஆகையால், பயங்கரமான ஒரு நாளின் பார்வையிலிருந்து நம்ப மறுப்பவர்களுக்குக் கேடுதான்.
[19:39] தீர்ப்பு வழங்கப்படுகின்ற போது, குற்ற முணர்ந்து வருந்தும் நாள் குறித்து அவர்களை எச்சரிக்கை செய்வீராக. அவர்கள் முற்றிலும் கவனமற்றவர்களாக உள்ளனர்; அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.