குர்ஆன் 19:4 — மேரி
அவர் கூறினார், “என் இரட்சகரே, எனது உடலில் எலும்புகள் மக்கிப்போய் விட்டன, மேலும் எனது தலைமுடியோ நரையினால் ஜொலிக்கின்றது. உம்மை இறைஞ்சிப் பிரார்த்திப்பதால், என் இரட்சகரே, நான் ஒரு போதும் விரக்தி அடைவதில்லை.
[19:3] அவர் தன் இரட்சகரை அழைத்தார், இரகசியமானதோர் அழைப்பு.
[19:5] “எனக்குப் பிறகு என்னைச் சார்ந்திருப் பவர்களைக் குறித்து நான் கவலையடை கின்றேன், மேலும் என் மனைவியோ மலடியாக இருக்கின்றார். உம்மிடமிருந்து, ஒரு வாரிசை, எனக்கு வழங்குவீராக.