குர்ஆன் 19:47 — மேரி
அவர் கூறினார், “உங்கள் மீது அமைதி நிலவட்டும். உங்களை மன்னிக்கும்படி என் இரட்சகரிடம் நான் இறைஞ்சிப் பிரார்த்திப்பேன்; அவர் என்னிடம் மிக்க கனிவுடன் இருக்கின்றார்”.
[19:46] அவர், “என்னுடைய தெய்வங்களை நீர் கைவிட்டு விட்டீரா, ஆப்ரஹாமே? நீர் நிறுத்திக் கொள்ளவில்லையென்றால் நான் உம்மைக் கல்லாலடித்துக் கொன்று விடுவேன். என்னைத் தனியே விட்டுச் சென்று விடும்” என்று கூறினார்.
[19:48] “நான் உங்களையும், கடவுள்-உடன் நீங்கள் வழிபடும் தெய்வங்களையும் விட்டு விலகிக் கொள்வேன். என் இரட்சகரை மட்டுமே நான் வழிபடுவேன். என் இரட்சகரை மட்டுமே இறைஞ்சிப் பிரார்த்திப்பதால், நான் தவறிப் போகச் சாத்தியமேயில்லை.”