குர்ஆன் 19:48 — மேரி
“நான் உங்களையும், கடவுள்-உடன் நீங்கள் வழிபடும் தெய்வங்களையும் விட்டு விலகிக் கொள்வேன். என் இரட்சகரை மட்டுமே நான் வழிபடுவேன். என் இரட்சகரை மட்டுமே இறைஞ்சிப் பிரார்த்திப்பதால், நான் தவறிப் போகச் சாத்தியமேயில்லை.”
[19:47] அவர் கூறினார், “உங்கள் மீது அமைதி நிலவட்டும். உங்களை மன்னிக்கும்படி என் இரட்சகரிடம் நான் இறைஞ்சிப் பிரார்த்திப்பேன்; அவர் என்னிடம் மிக்க கனிவுடன் இருக்கின்றார்”.
[19:49] அவர்களையும் மேலும் கடவுள்-உடன் அவர்கள் வழிபட்ட தெய்வங்களையும் அவர் கை விட்டு விட்ட காரணத்தால், நாம் அவருக்கு ஐசக்கையும் மற்றும் ஜேக்கபையும் அளித்தோம், மேலும் அவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு வேதம் வழங்கப்பட்டவராகவும் நாம் ஆக்கினோம்.