குர்ஆன் 19:61 — மேரி
தனிமையிலிருக்கும் போதும், அவரை வழிபடு வோருக்கு, மிக்க அருளாளர் வாக்களித் துள்ளபடி ஏதேன் தோட்டங்கள் அவர் களுக்காக காத்திருக்கின்றன. நிச்சயமாக, அவருடைய வாக்குறுதி நிறைவேறியே தீரும்.
[19:60] வருந்தித்திருந்தி, நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்கள் மட்டுமே, சிறிதளவும் அநீதமின்றி சுவனத்தில் நுழைவார்கள்.
[19:62] அங்கே அபத்தமான எதையும் அவர்கள் செவியேற்க மாட்டார்கள்; அமைதி மட்டுமே. பகலிலும், இரவிலும் அங்கே அவர்களுடைய வாழ்வாதாரங்களை அவர்கள் பெறுவார்கள்.