குர்ஆன் 19:62 — மேரி
அங்கே அபத்தமான எதையும் அவர்கள் செவியேற்க மாட்டார்கள்; அமைதி மட்டுமே. பகலிலும், இரவிலும் அங்கே அவர்களுடைய வாழ்வாதாரங்களை அவர்கள் பெறுவார்கள்.
[19:61] தனிமையிலிருக்கும் போதும், அவரை வழிபடு வோருக்கு, மிக்க அருளாளர் வாக்களித் துள்ளபடி ஏதேன் தோட்டங்கள் அவர் களுக்காக காத்திருக்கின்றன. நிச்சயமாக, அவருடைய வாக்குறுதி நிறைவேறியே தீரும்.
[19:63] சுவனம் இத்தகையதே; நமது அடியார்களில் நன்னெறியுடையோருக்கு நாம் அதனை அளிப்போம்.