Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:76 — மேரி

வழிகாட்டப்பட்டவர்களாக ஆவதைத் தேர்ந்தெ டுத்தோருடைய வழிகாட்டலைக் கடவுள் அதிகரிக்கின்றார். ஏனெனில் நல்ல செயல்கள் உம் இரட்சகரால் நிரந்தரமாக வெகுமதிய ளிக்கப்படுகின்றன, மேலும் மிக மேலான பலன்களைக் கொண்டு வருகின்றன.

[19:75] “எவர்கள் வழிதவறிச் செல்வதைத் தேர்ந்தெடுக்கின்றனரோ, அவர்களை மிக்க அருளாளர் அவர்களுக்கு வாக்களிக்கப் பட்டதை அவர்கள் காணும் வரை அதில் தொடர்ந்து செலுத்துவார் - ஒன்று தண்டனை அல்லது அவ்வேளை. அப்போது தான் உண்மையில் மிக மோசமானவர்கள், மேலும் வலிமையில் குறைந்தவர்கள் யார் என்பதை அவர்கள் கண்டு கொள்வார்கள்” என்று கூறுவீராக.

[19:77] நம்முடைய வெளிப்பாடுகளை ஏற்க மறுத்து விட்டுப் பின்னர், “நான் செல்வமும் பிள்ளைகளும் கொடுக்கப்படுவேன்”?! என்று கூறியவனை நீர் கவனித்திருக்கின்றீரா.