குர்ஆன் 19:98 — மேரி
அவர்களுக்கு முன்னர் பல தலைமுறையினரை நாம் அழித்துள்ளோம்; அவர்களில் எவரையேனும் உம்மால் காணவோ, அல்லது அவர்களிடமிருந்து சப்தம் எதையேனும் கேட்கவோ முடிகின்றதா?
[19:97] இவ்விதமாக (குர்ஆனாகிய) இதனை நாம் நன்னெறியாளர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதற்காகவும், மேலும் இதனைக் கொண்டு எதிர்ப்பாளர்களை எச்சரிப்பதற்காகவும், உமது மொழியில் விவரிக்கப்பட்டதாக ஆக்கியுள்ளோம்.