குர்ஆன் 2:104 — பசுங்கன்று
நம்பிக்கை கொண்டோரே, “ ராஇனா”* (எங்கள் மேய்ப்பராக இருப்பீராக) என்று சொல்லாதீர்கள். மாறாக, “உன்ளுர்னா”(எங்களைக் கண் காணிப்பீராக) என்று நீங்கள் கூற வேண்டும், மேலும் கவனிக்க வேண்டும். நம்ப மறுப்பவர்கள் வலிமிக்கதொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
[2:103] அவர்கள் மட்டும் அறிந்திருந்தால், அவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்தினால் கடவுள்-இடம் இருந்து உள்ள வெகுமதி மிகவும் சிறந்ததாகும்.
[2:105] வேதத்தைப் பின்பற்றுவோரில் உள்ள நம்பமறுப் பவர்களோ, அன்றி இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களோ, உங்கள் மீது உங்கள் இரட்சகரிடமிருந்து எந்த அருட்கொடையும் இறக்கப்படுவதைக் காண விரும்பமாட்டார்கள். ஆயினும் கடவுள் தான் தேர்ந்தெடுத் தோர் மீது தன் அருட்கொடைகளைப் பொழிகின்றார். கடவுள் அளவில்லாத அருளைத் தன் வசம் வைத்துள்ளார்.