Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:106 — பசுங்கன்று

ஏதேனும் ஓர் அற்புதத்தை நாம் ரத்துச் செய்தா லோ அல்லது மறக்கும்படிச் செய்தாலோ, அதை விடச் சிறந்த அற்புதத்தையோ அல்லது குறைந்த பட்சம் அதைப் போன்ற ஒன்றையோ நாம் உருவாக்குவோம். கடவுள் சர்வ சக்தியுடையவர் என்ற உண்மையை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளவில்லையா?

[2:105] வேதத்தைப் பின்பற்றுவோரில் உள்ள நம்பமறுப் பவர்களோ, அன்றி இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களோ, உங்கள் மீது உங்கள் இரட்சகரிடமிருந்து எந்த அருட்கொடையும் இறக்கப்படுவதைக் காண விரும்பமாட்டார்கள். ஆயினும் கடவுள் தான் தேர்ந்தெடுத் தோர் மீது தன் அருட்கொடைகளைப் பொழிகின்றார். கடவுள் அளவில்லாத அருளைத் தன் வசம் வைத்துள்ளார்.

[2:107] வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் கடவுள் வசமே உள்ளது என்ற உண்மையையும் கடவுள்-உடன் வேறெவரும் உங்களுக்கு இரட்சகராகவும், எஜமானராகவும் இல்லை என்பதையும் நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளவில்லையா?