குர்ஆன் 2:107 — பசுங்கன்று
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் கடவுள் வசமே உள்ளது என்ற உண்மையையும் கடவுள்-உடன் வேறெவரும் உங்களுக்கு இரட்சகராகவும், எஜமானராகவும் இல்லை என்பதையும் நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளவில்லையா?
[2:106] ஏதேனும் ஓர் அற்புதத்தை நாம் ரத்துச் செய்தா லோ அல்லது மறக்கும்படிச் செய்தாலோ, அதை விடச் சிறந்த அற்புதத்தையோ அல்லது குறைந்த பட்சம் அதைப் போன்ற ஒன்றையோ நாம் உருவாக்குவோம். கடவுள் சர்வ சக்தியுடையவர் என்ற உண்மையை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளவில்லையா?
[2:108] கடந்தகாலத்தில் மோஸஸிடம் கேட்கப் பட்டவைப் போன்று நீங்கள் உங்கள் தூதரிடம் கேட்க விரும்புகின்றீர்களா? எவர் ஒருவர் நம்பிக்கை கொள்வதற்கு மாற்றாக நம்பிக்கை கொள்ள மறுப்பதைத் தேர்ந்தெடுக்கின்றாரோ, அவர் சரியான பாதையிலிருந்து மெய்யாகவே விலகிச்சென்று விட்டார்.