குர்ஆன் 2:108 — பசுங்கன்று
கடந்தகாலத்தில் மோஸஸிடம் கேட்கப் பட்டவைப் போன்று நீங்கள் உங்கள் தூதரிடம் கேட்க விரும்புகின்றீர்களா? எவர் ஒருவர் நம்பிக்கை கொள்வதற்கு மாற்றாக நம்பிக்கை கொள்ள மறுப்பதைத் தேர்ந்தெடுக்கின்றாரோ, அவர் சரியான பாதையிலிருந்து மெய்யாகவே விலகிச்சென்று விட்டார்.
[2:107] வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் கடவுள் வசமே உள்ளது என்ற உண்மையையும் கடவுள்-உடன் வேறெவரும் உங்களுக்கு இரட்சகராகவும், எஜமானராகவும் இல்லை என்பதையும் நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளவில்லையா?
[2:109] இப்போது நீங்கள் நம்பிக்கை கொண்டிருப் பதால், வேதத்தைப் பின்பற்றுவோரில் பலரும் நீங்கள் அதி சீக்கிரம் நிராகரிப்பிற்குத் திரும்பி விடுவதைக் காணவே விரும்புகின்றனர். இது ஏனெனில், உண்மை அவர்களுக்குத் தெளி வானதன் பின்னர் அவர்கள் கொண்ட பொறாமையினாலேயே ஆகும். கடவுள் அவருடைய தீர்ப்பை வழங்கும்வரை நீங்கள் அவர்களை மன்னித்து அவர்களைத் தனியே விட்டு விட வேண்டும், கடவுள் சர்வ சக்தியுடையவர்.