குர்ஆன் 2:109 — பசுங்கன்று
وَدَّ كَثيرٌ مِن أَهلِ الكِتٰبِ لَو يَرُدّونَكُم مِن بَعدِ إيمٰنِكُم كُفّارًا حَسَدًا مِن عِندِ أَنفُسِهِم مِن بَعدِ ما تَبَيَّنَ لَهُمُ الحَقُّ ۖ فَاعفوا وَاصفَحوا حَتّىٰ يَأتِىَ اللَّهُ بِأَمرِهِ ۗ إِنَّ اللَّهَ عَلىٰ كُلِّ شَيءٍ قَديرٌ
இப்போது நீங்கள் நம்பிக்கை கொண்டிருப் பதால், வேதத்தைப் பின்பற்றுவோரில் பலரும் நீங்கள் அதி சீக்கிரம் நிராகரிப்பிற்குத் திரும்பி விடுவதைக் காணவே விரும்புகின்றனர். இது ஏனெனில், உண்மை அவர்களுக்குத் தெளி வானதன் பின்னர் அவர்கள் கொண்ட பொறாமையினாலேயே ஆகும். கடவுள் அவருடைய தீர்ப்பை வழங்கும்வரை நீங்கள் அவர்களை மன்னித்து அவர்களைத் தனியே விட்டு விட வேண்டும், கடவுள் சர்வ சக்தியுடையவர்.
[2:108] கடந்தகாலத்தில் மோஸஸிடம் கேட்கப் பட்டவைப் போன்று நீங்கள் உங்கள் தூதரிடம் கேட்க விரும்புகின்றீர்களா? எவர் ஒருவர் நம்பிக்கை கொள்வதற்கு மாற்றாக நம்பிக்கை கொள்ள மறுப்பதைத் தேர்ந்தெடுக்கின்றாரோ, அவர் சரியான பாதையிலிருந்து மெய்யாகவே விலகிச்சென்று விட்டார்.
[2:110] நீங்கள் தொடர்புத்தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும். மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக்கவும் வேண்டும். உங்கள் ஆன்மாவிற்காக எந்த நன்மையை நீங்கள் முற்படுத்தி அனுப்பினாலும் அதனை நீங்கள் கடவுள்-இடம் காண்பீர்கள். கடவுள் நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் பார்ப்பவராக இருக்கின்றார்.