குர்ஆன் 2:110 — பசுங்கன்று
நீங்கள் தொடர்புத்தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும். மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக்கவும் வேண்டும். உங்கள் ஆன்மாவிற்காக எந்த நன்மையை நீங்கள் முற்படுத்தி அனுப்பினாலும் அதனை நீங்கள் கடவுள்-இடம் காண்பீர்கள். கடவுள் நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் பார்ப்பவராக இருக்கின்றார்.
[2:109] இப்போது நீங்கள் நம்பிக்கை கொண்டிருப் பதால், வேதத்தைப் பின்பற்றுவோரில் பலரும் நீங்கள் அதி சீக்கிரம் நிராகரிப்பிற்குத் திரும்பி விடுவதைக் காணவே விரும்புகின்றனர். இது ஏனெனில், உண்மை அவர்களுக்குத் தெளி வானதன் பின்னர் அவர்கள் கொண்ட பொறாமையினாலேயே ஆகும். கடவுள் அவருடைய தீர்ப்பை வழங்கும்வரை நீங்கள் அவர்களை மன்னித்து அவர்களைத் தனியே விட்டு விட வேண்டும், கடவுள் சர்வ சக்தியுடையவர்.
[2:111] சிலர், “யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களைத் தவிர வேறு எவரும் சுவனத்தில் நுழைய மாட்டார்கள்” என்று கூறி உள்ளனர். அவர் களுடைய ஆசை மிக்க எண்ணங்கள் இத்த கையதே ஆகும். “நீங்கள் சரியானவர்களாக இருந்தால் உங்களுடைய சான்றை எங்களுக்கு காட்டுங்கள்”, என்று கூறுவீராக.