குர்ஆன் 2:111 — பசுங்கன்று
சிலர், “யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களைத் தவிர வேறு எவரும் சுவனத்தில் நுழைய மாட்டார்கள்” என்று கூறி உள்ளனர். அவர் களுடைய ஆசை மிக்க எண்ணங்கள் இத்த கையதே ஆகும். “நீங்கள் சரியானவர்களாக இருந்தால் உங்களுடைய சான்றை எங்களுக்கு காட்டுங்கள்”, என்று கூறுவீராக.
[2:110] நீங்கள் தொடர்புத்தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும். மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக்கவும் வேண்டும். உங்கள் ஆன்மாவிற்காக எந்த நன்மையை நீங்கள் முற்படுத்தி அனுப்பினாலும் அதனை நீங்கள் கடவுள்-இடம் காண்பீர்கள். கடவுள் நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் பார்ப்பவராக இருக்கின்றார்.
[2:112] உண்மையில், எவர்கள் கடவுள்-க்கு மட்டும் தங்களை முற்றிலும் அடிபணியச் செய்து அதே சமயம் நன்னெறியானதொரு வாழ்வு நடத்து கின்றனரோ அவர்கள் தங்களுக்குரிய வெகுமதியைத் தங்கள் இரட்சகரிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள்; அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்*.