Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:112 — பசுங்கன்று

உண்மையில், எவர்கள் கடவுள்-க்கு மட்டும் தங்களை முற்றிலும் அடிபணியச் செய்து அதே சமயம் நன்னெறியானதொரு வாழ்வு நடத்து கின்றனரோ அவர்கள் தங்களுக்குரிய வெகுமதியைத் தங்கள் இரட்சகரிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள்; அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்*.

[2:111] சிலர், “யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களைத் தவிர வேறு எவரும் சுவனத்தில் நுழைய மாட்டார்கள்” என்று கூறி உள்ளனர். அவர் களுடைய ஆசை மிக்க எண்ணங்கள் இத்த கையதே ஆகும். “நீங்கள் சரியானவர்களாக இருந்தால் உங்களுடைய சான்றை எங்களுக்கு காட்டுங்கள்”, என்று கூறுவீராக.

[2:113] “கிறிஸ்தவர்களிடம் எந்த அடிப்படையும் இல்லை,” என்று யூதர்கள் கூறினார்கள், அதே சமயம்,” யூதர்களிடம் எந்த அடிப்படையும் இல்லை,” என்று கிறிஸ்தவர்கள் கூறினார்கள். இருப்பினும் அவர்கள் இருவரும் வேதத்தைப் படிக்கின்றார்கள். இவ்விதமானவை அறிவு இல்லாதவர்களின் கூற்றுக்களே ஆகும். மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் அவர்களுடைய தர்க்கங்கள் குறித்துக் கடவுள் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார்.